வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள் பணிப் புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

992

தாதியர்கள் பணிப் புறக்கணிப்பு..

வாரத்தில் 5 நாள் வேலையை அமுல்படுத்தல், பதவிநிலை சேவையாக மீண்டும் அறிவித்தல் , பதிவி உயர்வை தரம் 11 இற்று 5 வருடம் தரம் 1க்கு 12 வருடங்களாக மாற்றுதல் , டிஏரி கொடுப்பணவு 10000 ஆக உயர்த்துதல்,

சீருடை கொடுப்பனவினை 200000 ஆக உயர்த்துதல், மேலதிக நேர கொடுப்பணவு 1/80 ஆக வழங்குதல் போன்ற 9 கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்களும் இன்று (01.07.2021) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டு வந்த தாதியர்கள் பணி புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலை நோக்கி வருகை தந்த நோயாளர்கள் மற்றும் விடுதியில் தங்கியிருந்து பணியாற்றும் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்திருந்தமையினை அவதானிக்க முடிந்தது.

எனினும் நோயாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவசர நோயாளர் பிரிவுகளில் மாத்திரம் தாதியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியசாலையின் அனைத்து பிரிவுகளிலும் வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் ஒத்துழைப்புடன் சேவைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பினால் மந்த நிலனை ஏற்பட்டுள்ளது.