அமைச்சு பதவியில் இருந்து விலகமாட்டேன் : ரவூப் ஹக்கீம்!!

478

rauf-hakeem

அரசாங்கத்துக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கின்ற போதும், தாம் அமைச்சு பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அரசாங்கத்தில் இணைந்திருந்து முஸ்லிம் சமூகத்துக்கு சேவையாற்றப்போவதாக ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமது கட்சி அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போதே இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தமது கட்சி முஸ்லிம் சமூகம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கையளித்த அறிக்கை தொடர்பில் அரசாங்க அமைச்சர் விமர்சனம் வெளியிட்டு வருகின்றபோதும், ஜெனிவாவில் யோசனையால் இலங்கை அரசாங்கத்துக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை என்று ஹக்கீம் குறிப்பிட்டார்.