
தான் கதாநாயகன் அவதாரம் எடுத்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் சந்தானம்.
சந்தானம் தனி ஹீரோவாக நடிக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ஜிம்முக்கு சென்று உடல் எடையை எல்லாம் குறைத்துள்ளாராம்.
இந்நிலையில் தான் ஹீரோவாக வேண்டிய காரணம் குறித்து சந்தானம் கூறுகையில்,
ஹீரோவாக நடிக்க வேண்டும், பஞ்ச் வசனம் பேச வேண்டும், பத்து பேரை பறக்க விட வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஒரு நகைச்சுவை நடிகர் தான் ஹீரோவாக நடிக்க முடியும்.
அந்த நபர் அப்பாவியாகவும் அதே சமயம் ஹீரோயிசம் செய்து கைத்தட்டல்களையும் வாங்க வேண்டும்.
இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பெரிய ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள். இந்த கதாபாத்திரத்தை புதுமுகங்கள் தாங்க முடியாது. அதனால் தான் நானே ஹீரோவாக நடிப்பது என்று முடிவு செய்தேன்.
இந்த படத்தில் கூடுதலாக நகைச்சுவை செய்து ஹீரோவாகவில்லை. நான் என்ன செய்தாலும் அதை மக்கள் இரசிப்பார்கள் என்றும் நினைக்கவில்லை.
திரைக்கதையில் இருந்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறோம். படத்தில் ஏராளமான சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன என்றார் சந்தானம்.





