வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் தொலைபேசிகள் திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

848

A8வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் கைத்தொலைபேசிகளைத் திருடினார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் பயிற்சிக்காக வந்திருந்தபோது சக பொலிஸாரின் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட சில பொருட்களை திருடியதாகப் பொலிஸார் கூறினர்.