இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

1129

இலங்கை வரும் வெளிநாட்டவர்..

இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டால் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

வௌிநாட்டுப் பயணிகளுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் தொற்று உறுதிப்படுத்தப்படாவிடின் அவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இந்த திட்டத்தை எதிர்வரும் 19 ஆம் திகதியின் பின்னர் செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். ஏனைய வௌிநாட்டவர்களை அழைத்து வரும் நடவடிக்கைகள், Bio-bubble பாதுகாப்பு முறைமையின் கீழ் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு உள்ளீர்ப்பதற்கு விமான நிறுவனங்கள் மூலம் நிவாரணத் திட்டங்களை வழங்குவது தொடர்பிலும் சுற்றுலாத்துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.