பரபரப்பான ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்திய பாகிஸ்தான்!!

730

Pak

மிர்புரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பிரிவு–2ல் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, அவுஸ்திரேலியாவை எதிர்கொண்டது. நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெய்லி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணியில் ஜுனைட் கானுக்குப்பதில், பாபர் வாய்ப்பு பெற்றார். பாகிஸ்தான் அணிக்கு ஷேசாத் அதிர்ச்சி தந்தார். போலிஞ்சர் வேகத்தில் இவர் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். வட்சன் வேகத்தில் தலைவர் ஹபீஸ் (13) வெளியேறினார். இதன் பின் இணைந்த உமர் அக்மல், கம்ரன் அக்மல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

உமர் அக்மல் அரை சதம் கடந்தார். கம்ரன் அக்மல் 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய உமர் அக்மல் 94 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 191 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 192 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங்கள் எடுத்தது. அதிக பட்சமாக பிஞ்ச் 65 ஓட்டங்களும், மக்ஸ்வெல் 74 ஓட்டங்களும் எடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக உமர் அக்மல் தெரிவுசெய்யப்பட்டார்.