இந்தியா எந்த நாட்டுடனும் 20 நாட்கள் கூட போரிட முடியாது!!

1300

Indian Army

போர் வந்தால் சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவத்திடம் தளவாடங்கள் இல்லை என்று தலைமை தளபதி ஜெனரல் விக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.

அண்மை காலமாக கடற்படை தளங்களில் ஏற்பட்ட விபத்துக்களால் நாட்டின் பாதுகாப்பு துறை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்கு பொறுப்பேற்று கடற்படை தளபதியாக இருந்த ஜோஷி பதவி விலகிய பரபரப்பு ஓய்வதற்குள் உலகில் இரண்டாவது பெரிய ராணுவமான இந்தியா ராணுவத்தில் வீரர்கள் பற்றாகுறை நிலவுவதோடு அதிநவீன பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக ராணுவத்தின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் வசம் தற்போது உள்ள போர் கருவிகளை வைத்து மற்றொரு நாட்டுடன் 20 நாட்கள் கூட போரிட முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை தளபதி ஜென்ரல் விக்ரம் சிங் பாதுகாப்பை பலப்படுத்தும் அதிநாவீன போர் கருவிகளை வாங்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். ராணுவத்திடம் குறைந்தது 50% போர் தளவாடங்கள் சேமிப்பில் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர் 20 சதவீதம் கூட இந்திய ராணுவத்தின் சேமிப்பில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அரசின் பாராமுகத்தால் இந்திய ராணுவத்தில் நிலையற்ற தன்மை நீடிப்பதாக தெரிவித்துள்ள விக்ரம் சிங் 2019ம் ஆண்டிற்குள் இந்திய ராணுவத்தை பலப்படுத்த வேண்டும் என்றார். இதற்காக ஆண்டுக்கு 19ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி அதிநவீன கருவிகளை வாங்க வேண்டும் என வலியுறுத்தி அவர் மே மாதம் அமைய உள்ள புதிய அரசு இந்த பணிகளை மேற்கொள்ளும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.