இலங்கையில் இணையவழிக் கல்வி : சவால்களுக்கு மத்தியில் மாணவர்கள்!!

823

இணையவழி கல்வி..

இலங்கையில் இணையவழியில் கல்வி பயில்வது மாணவர்களுக்குச் சவாலான ஒன்றாகக் காணப்பட்டு வருகிறது.

பலதரப்பட்ட இடங்களிலும் இணையவழி கல்விக்கான வலையமைப்பு வசதியின்மை காரணமாக மாணவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து கல்வி பயிலவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அவ்வாறான இடங்களில் மாணவர்கள் பல மையில் தூரம் சென்றும், மரங்களின் மேலும், மலைகளின் மேலும் சென்று கல்வி கற்கவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.