வரலாற்றுச் சாதனையுடன் நெதர்லாந்தை அபார வெற்றிக்கொண்ட இலங்கை அணி!!

487

SL

சிட்டகொங்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கையும் நெதர்லாந்து அணிகளும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய கத்துகுட்டி அணியான நெதர்லாந்தை எதிர்பார்த்ததை போலவே இலங்கை ஆரம்பித்தில் இருந்தே தனது அபார பந்து வீச்சின் மூலம் நிலைகுலையச்செய்தது.

நெதர்லாந்து அணியில் கூப்பர் (16) தவிர, யாருமே ஒற்றை இலக்க ஓட்டத்தை தாண்டவில்லை. இதனால் அந்த அணி 10.3 ஓவரில் 39 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. உலக கிண்ண வரலாற்றிலேயே ஒரு அணி எடுக்கும் குறைந்த ஓட்டங்கள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பந்து வீச்சில் மத்யூஸ், மெண்டிஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். மலிங்க 2 விக்கெட்டும், குலசேகர 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 40 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 40 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

இலங்கை அணியில் குசல் பெரேரா 14 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். டில்ஷான் 14, ஜயவர்தன 11 ஓட்டங்களுடன் வெற்றியை உறுதி செய்தனர். ஆட்டநாயகன் விருது மத்யூஸ்க்கு வழங்கப்பட்டது.