போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய இளம் நடிகர்!!

550

Udhay

தெலுங்கு நடிகர் நந்தூரி உதய்கிரண் போதைப்பொருள் கடத்தலில் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

தெலுங்கு நடிகர் நந்துரி உதய் கிரண் (29) மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த ரோதிமி ஒலுசொலா கெஹிந்தே ஆகியோர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக ஹைதராபாத் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸ் பகுதி அருகே அவர்கள் இரண்டு பேரையும் பொலிசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 15 கிராம் கொக்கைன் போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.

வியாபார விசாவில் இந்தியா வந்த ரோதிமி டெல்லியில் உள்ள சூடானைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி அதை பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் விற்று வந்துள்ளார்.

அவர் ஒரு கிராம் போதைப் பொருளை 1,500க்கு வாங்கி அதை மூவாயிரத்திற்கு அதாவது இரட்டிப்பு விலைக்கு விற்று வந்த அவர் உதய் கிரணை சந்தித்து அவருக்கு போதைப் பொருளை வினியோகித்து வந்துள்ளார் என்று பொலிஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

உதய் கிரண் பராரே, ரக்ஷகுலு, யுவராஜ்யம் மற்றும் பேஸ்புக் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.