வவுனியா தனியார் வங்கியில் இரவு நேரத்தில் திடீரென ஒலித்த அவசர எச்சரிக்கை மணி!!

6963

தனியார் வங்கியில்..

வவுனியா ஹோரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் இரவு 7.30 மணியளவில் திடீரென ஒலித்த அவசர எச்சரிக்கை மணியினால் அவ்விடத்தில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டது.

வங்கியின் வாடிக்கையாளர் சேவைகள் நிறைவடைந்து அனைத்து ஊழியர்களும் சென்ற பின்னர் 7.30 மணியளவில் வங்கியிலிருந்து திடீரென அவசர எச்சரிக்கை ஒலித்துள்ளது. இதனால் அவ்விடத்தில் நின்ற மக்கள் பதற்றத்துடன் நின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு விரைவாக தகவல் சென்றதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். வங்கியில் பாதுகாப்பு தொழிநுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர எச்சரிக்கை ஒலித்திருக்காலம் என வங்கி உத்தியோகத்தர்கள் சந்தேகம் வெளியிட்டனர்.