கொளுத்தும் வெயிலில் நடக்கும் படப்பிடிப்பால் சமந்தா தவிப்பு!!

517

Samantha1

சமந்தாவுக்கு ஏற்கெனவே தோல் நோய் இருந்தது. இதற்காக சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் சிகிச்சை எடுத்தார். நோய் குணமானதை தொடர்ந்து மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் விஜய் ஜோடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். விஜய்யுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

அங்கு வெயில் கொளுத்துகிறது. அந்த வெயிலிலும் படப்பிடிப்பை நடத்துகின்றனர். வெயிலில் நீண்ட நேரம் நிற்க வேண்டி இருப்பதால் சமந்தா தவிக்கிறார்.

மீண்டும் தோல் நோய் தொற்றிக்கொள்ளுமே என்ற பயம் ஏற்பட்டுள்ளதாம். தன்னால் படப்பிடிப்பு இடையூறு வரக்கூடாது எனக் கருதி கஷ்டத்தை பொறுத்துக்கொண்டு நடிக்கிறாராம்.