வவுனியா வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு!!

1517

பணிப்புறக்கணிப்பு..

கடந்த 2ம் திகதி முதல் அரச நிறுவனங்களை வழமை போன்று செயற்படுமாறும் அனைத்து அரச சேவை ஊழியர்களையும் பணிக்கு அழைப்பதற்கான சுற்று நிருபத்தை அரசாங்கம் வெளியிட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியிலுள்ள தாதியர் தொழிற்சங்கத்தினர் இன்று (05.08.2021) காலை 6.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையிலான காலப்பகுதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகள் முடங்கியதுடன் நோயாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.