வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களுக்கு சினோபாம் இரண்டாவது தடுப்பூசி ஏற்றல்!!

1730

இரண்டாவது தடுப்பூசி..

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களுக்கு சினோபாம் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் இன்று (05.08) ஏற்றப்பட்டன.

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு இராணுவத்தினரால் கடந்த மாதம் 5 ஆம் திகதி சினோபாம் கோவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டது.

அதற்கமைவாக, சினோபாம் கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் (05.08) இன்று ஏற்றப்பட்டது. அந்தவகையில் மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தில் இராணுவத்தினரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து அங்கு பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றியிருந்தனர்.