வவுனியா தாண்டிக்குளத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் : பொலிஸார் விசாரணை!!

1581

மனித எச்சங்கள்..

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள வயல் காணியில் மனித எச்சங்கள் காணப்பட்டதனையடுத்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று (08.08.2021) காலை மனித மண்டை ஒடு காணப்படுவதாக பொதுமகனொருவர் வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மேலும் குறித்த மனித மண்டை ஓடு வயல் பகுதிக்கு அருகேயுள்ள மயானத்தில் இருந்து விலங்குகள் எவையேனும் எடுத்து வந்து இவ்விடத்தில் வீசி இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.