வவுனியாவிலுள்ள ஆலயங்களில் ஆடி அமாவாசை விசேட வழிபாடுகள்!!

1195

ஆடி அமாவாசை..

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் ஆடி மாதம் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து நம் முன்னோர்களை வழிபாடு செய்தால் வாழ்வில் பல்வேறு சிறப்புகளை பெறலாம் என்பதனால் இவ்விரதம் முக்கியத்துவம் பெறுகின்றது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ஆலயங்களில் இன்று (08.08.2021) காலை ஆடி அமாவாசை விரத விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன் போது சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து ஆடி அமாவாசை விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்களது பித்துருக்களுக்கான வழிபாடுகளை மேற்கொண்டதுடன் அந்தனர்களுக்கு தானமும் வழங்கினர்.