வவுனியா செட்டிக்குளத்தில் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது!!

1438

செட்டிக்குளத்தில்..

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 1.5 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

செட்டிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நகரில் சந்தேகத்திக்கிடமாக நின்ற இரு இளைஞர்களின் கையில் வைத்திருந்த பையினை சோதனையிட்ட சமயத்தில் 1.5 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றினர்.

26 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து கைப்பற்றிய கேரள கஞ்சா மற்றும் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.