புதுக்குளம் மகா வித்தியாலய ஆசிரியர்கள்..

அதிபர், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கப் போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்நிலையில்,

இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தினர் கல்வி செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.

புதுக்குளம் மகா வித்தியாலய கல்விசார் வன ஆளணியினர் 07.08.2021 ம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை கற்றல் கற்பித்தல் மற்றும் நிகர்நிலைக் கற்பித்தலில் இருந்து தற்காலிகமாக விலகி தொழிற்சங்க போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கியுள்ளனர்.





