நீண்ட இடைவெளிக்குப் பின் தொலைக்காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி!!

511

Rajaniரஜினி பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிப்பதை நீண்ட காலமாக தவிர்த்து வருகிறார். சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதற்காக பேட்டி அளிப்பதில்லை.

தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தொலைக்காட்சியில் தோன்றி பேட்டி அளித்துள்ளார். கோச்சடையான் படம் பற்றிய சிறப்பு பேட்டியாக ஜெயா தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பாகிறது.

இதற்காக ஸ்டுடியோவுக்கு சென்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். காமெடி நடிகர் விவேக் அவரை பேட்டி கண்டார்.

கோச்சடையான் படம் நவீன தொழில் நுட்பத்தில் 3டி அனிமேஷன் படமாக தயாராகியுள்ளது. இந்த படம் பற்றியும் இதில் நடித்த அனுபவங்கள் குறித்தும் பேட்டியில் கூறியுள்ளார். சினிமா அல்லாத சில பரபரப்பான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளதாக தெரிகிறது. தான் நடித்த பழைய படங்கள் குறித்தும் நினைவு கூர்கிறார்.

அரசியல் சம்பந்தமான கேள்விகள் இடம் பெற்றனவா, அதற்கு ரஜினி பதில் அளித்தாரா என்பன போன்ற விவரம் தெரிய வில்லை. இந்த பேட்டி இன்னும் ஓரிரு வாரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.