பூனை சூப் சாப்பிடுங்களேன் : பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் சமையல் குறிப்பு!!

398

Soup

சீனாவில் பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பூனை சூப் செய்முறையை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் குண்டாங் மாகாணத்தில் லீ செங் பிங் என்கிற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் விபோ(Weibo) என்ற சீனாவின் சமூக வலைத்தளத்தில் உயிருடன் உள்ள பூனையை கொன்று, தோலையுரித்து துண்டுகளாக்கி சூப் தயாரித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, உடனே தனது பக்கங்களில் இருந்து சமையல் குறிப்பை அகற்றியுள்ளார். ஆனால் அதில் அவர் ஹேய் பாருங்கள் நான் ஒரு புலியை பிடிப்பேன், அதை சமைத்து சாப்பிடுவேன் என எழுதி உள்ளார்.

படங்களை மட்டும் எடுத்து விட்டு பூனையை எப்படி வேக வைத்தார், எவ்வாறு வெட்டினார் என்பதை விளக்கியுள்ளார், அதற்கு பதில் ஒரு கூண்டுக்குள் இருக்கும் பூனையின் படம் வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் நீண்ட கோட்டுடன் கண்ணாடி அணிந்து சூப் தயாரிக்கும் இளம் பெண்ணின் படமும் இடம்பெற்றுள்ளது. சட்டபூர்வமாகத்தான் பூனையை கொன்றேன், பூனை சூப் வைத்து சாப்பிட்டது எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் கூறி உள்ளார்.

தென்கிழக்கு சீனாவின் குவாங்டாங் பகுதியை சேர்ந்தவர்கள், பலவகையான விலங்குகளை கொன்று சூப் வைத்து மற்றும் சமைத்து சாப்பிடும் பழக்கம் பிரபலமானது தான் என்றும், இதனால் தவறு ஏதும் இல்லை எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.