வவுனியாவிலுள்ள பெரும்பாலான ஆலயங்களில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் ஆத்ம சாந்தி விசேட வழிபாடு!!

990

ஆலயங்களில்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 14 ம் திகதி இலங்கை வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட,

பாடசாலை மாணவர்கள் 54 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதுமாக 61 பேரினது 15 ஆண்டு நினைவு நாள் இன்று (14.08.2021) உணர்வுபூர்வமாக மக்களது கண்ணீருடன் நடைபெற்றது.

வருடந்தோறும் குறித்த படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் பகுதியில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட சிறுவர் இல்ல வளாகத்தில் அனுஸ்டிக்கப்படுவதோடு நாட்டில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவது வழமை.

இருப்பினும் இம்முறை குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஸ்டிக்க பொலிசார் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் தடைவிதித்துள்ளனர். இந்நிலையில் வவுனியாலுள்ள பெரும்பாலான ஆலயங்களில் ஆத்ம சாந்தி விசேட வழிபாடு வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.