வவுனியா வடக்கு குடியேற்ற கிரமமான போகஸ்வெவ பகுதியில் சமுதாய அடிப்படை வங்கி திறந்து வைப்பு!!

1024

சமுதாய அடிப்படை வங்கி..

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிங்கள குடியேற்ற கிராமமான போகஸ்வெவ கிராமத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் நடமாடும் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த அலுவலகத்தினை சமுர்த்தி வதிவிட பொருளாதார, நுண்நிதி, சுயதொழில் மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின் தந்தையும் முன்னாள் மாகாண அமைச்சருமான எச்.பி.சேமசிங்க திறந்து வைத்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் மக்களின் கிராமங்கள் சிலவற்றில் கடந்த காலங்களில் பெரும்பான்மையின குடியேற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

அதில் ஒரு கிராமமான கலாபோகஸ்வெவ கிராமத்திற்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதிக்கு அண்மையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவும் மக்கள் குறைகேள் நிகழ்வுக்காக வருகை தந்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இப் பகுதி சமுர்த்தி பயனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் நடமாடும் அலுவலகம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் வவுனியா பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் அசங்க காஞ்சன குமார, வவுனியா தெற்கு சிங்கள பிரதேசபை உறுப்பினர்கள், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பௌத்த குருமார் என பலரும் கலந்து கொண்டனர்.