
இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், அணித் தெரிவாளருமான சனத் ஜெயசூரிய மற்றும் குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன ஆகியோருக்கு இடையில் T20 ஓய்வு தொடர்பில் ஏற்பட்டு இருந்த கருத்து முரண்பாடு முடிவுக்கு வந்துள்ளது.
சரியான முறையில் கருத்து பரிமாற்றம் நடைபெறாமையே இந்த பிரச்சனைக்கு காரணம் என்றும் சங்கக்கார, ஜெயவர்த்தன ஆகியோருடன் பேசி இந்த பிரச்சினையை முடித்து விட்டதாகவும் தங்களுக்குள் எப்போதும் நல்ல உறவு முறை இருப்பதாகவும் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது உறுதியளித்துள்ளார்.
இது எனது கடைசி T20 தொடர் என்று ஊடக நேர்காணலில் சங்கக்கார தெரிவித்து இருந்தாரே தவிர உத்தியோகபூர்வமாக தனது ஓய்வை அறிவிக்கவில்லை என ஜெயசூரிய கூறியுள்ளார்.
நல்ல முறையில் நீண்ட நேரம் இது தொடர்பாக பேசி சகல விடயங்களையும் சுமூகமாக தீர்த்துக் கொண்டதாக சனத் ஜெயசூரிய மேலும் தெரிவித்தார்.





