நயன்தாராவுக்கு பிடித்த உணவு இறால் குழம்பு. அதை சாப்பிடக் கூடாது என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளார். இதனால் மன முடைந்து இருக்கிறார். நயன்தாரா ஏற்கனவே காதல் தோல்வியில் இருக்கிறார். சிம்பு, பிரபு தேவாவுடனான இரு காதலும் நிறைவேறாமல் போனது. இனிமேல் யாரையும் காதலிப்பது இல்லை என்ற உறுதியான முடிவோடு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் இறால் மீதான அவரது அளப்பரிய காதலில் அடி விழுந்துள்ளது. நயன்தாரா சாப்பிடும் உணவு வகைகளில் முதல் இடத்தில் இருப்பது இறால் மீன் குழம்பு. தினமும் உணவோடு இது இருக்க வேண்டும், வெளியூர் படப் பிடிப்புக்கு போனாலும் நயன்தாராவின் ஆசையை அறிந்து ஹோட்டல்களில் தேடி அலைந்து இறால் குழம்பை படக்குழுவினர் வாங்கி வைத்து விடுவார்கள். அளவுக்கு அதிகமாக இறால் குழம்பை சாப்பிட்டதால் நயன்தாராவின் சருமத்தில் மாற்றம் ஏற்பட்டது.
தோல் பளபளப்பை இழந்தது. இதுகுறித்து வைத்தியர்களிடம் ஆலோசித்த போது இறால் சாப்பிடுவதை நிறுத்துங்கள் என்று அறிவுறுத்தினார்களாம். இதனால் வேதனையில் இருக்கிறார் நயன்தாரா.