மாத இறுதியில் ஊரடங்கு நீடிக்கப்படுகிறதா? இறுதி தீர்மானம் எடுக்க அரச உயர்மட்டம் தயாராவதாக தகவல்!!

1699

ஊரடங்கு நீடிக்கப்படுகிறதா?

நாட்டில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிப்பது குறித்து அரச உயர்மட்டம் ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் நிலைமைகளை அவதானித்த பின்னர் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்தால் நோயாளர்களின் எண்ணிக்கை குறையலாமென சுகாதாரத்துறை நிபுணர்கள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையிலேயே இது தொடர்பில் அரச உயர்மட்டம் ஆராய்வதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி உரையாற்றிய போது, இனிவரும் நாட்களில் இந்த நாட்டை நீண்ட காலத்திற்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின்,

நாட்டிலுள்ள அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென தான் கேட்டுக்கொள்வதாக மக்களிடம் கோரிக்கையும் முன்வைத்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

-தமிழ்வின்-