
எஸ்.பி.ஜனநாதன், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, இயக்கும் படம் புறம்போக்கு.
இப்படத்தில் முதன்முறையாக ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கின்றனர். நாயகியாக ‘கோ’ கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் ஷாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். குலுமணாலியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் கூட ஆர்யா, ஷாம் சம்பந்தப்பட்ட ஒரு சண்டைக் காட்சி பெங்களூரிவில் படமாக்கப்பட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பை செட்டில் நடத்த இருக்கிறார் ஜனநாதன். இதற்காக கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட ஜெயில் செட்டை உருவாக்கி வருகிறார்கள்.
இந்த செட்டை மதராசப்பட்டணம் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய செல்வகுமார் என்பவர் உருவாக்கி வருகிறார். இங்கு அர்யா, விஜய் சேதுபதி, ஷாம், காத்திகா நாயர் சம்பந்தப்பட்ட அதிரடி சண்டைக் காட்சிகளை படம் பிடிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக கதையின் நாயகியாக நடிக்கும் கார்த்திகா நாயர் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்று வருகிறாராம்.





