
நடிகை குஷ்பு கார் மீது முட்டை வீசிய வழக்கு ஏப்ரல் 29ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து குஷ்பு கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மேட்டூரை அடுத்த இரட்டை புளியமரத்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் அ.முருகன் மேட்டூர் நீதிமன்றத்தில் குஷ்பு மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜாராகி விட்டு குஷ்பு திரும்பிச் செல்லும்போது, அவரது காரின் மீது பாமகவினர் தக்காளி, முட்டை ஆகியவற்றை வீசினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாமகவினர் 41 பேர் மீது மேட்டூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு புதன்கிழமை மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்1-இல் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்யராஜ் வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.





