முதல் தடவையாக 4000 ஐ தாண்டிய கொரோனா தொற்றாளர்கள்!!

983

கொரோனா..

இலங்கையில் முதல் தடவையாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டியுள்ளது. நாட்டில் இன்றைய தினம் 4,282 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, நாட்டில் இதுவரை 390,000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 18,769 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 183 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7,366 ஆக அதிகரித்துள்ளது.