பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை!!

1929

பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில்..

கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் அனைத்து பாடசாலைகளையும் மீளத் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு இது குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டெம்பர் இறுதி வாரத்தில் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வியமைச்சர் உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலைமையில் சில வகுப்புகளை மாத்திரம் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைக்கு அழைப்பதா அல்லது சுழற்சி முறையில் கட்டம் கட்டமாக வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளை தொடர்வதா என்பது தொடர்பிலும் கல்வியமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

மேலும், பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளை கல்வியமைச்சு பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

-தமிழ்வின்-