என் குழந்தைக்கு நடந்தது வேறு யாருக்கும் நேரக்கூடாது : கொரோனாவால் 12 வயது மகளை இழந்து கதறியழும் தாய்!!

2121

கொரோனா..

கோவிட் காரணமாக தன்னுடைய 12 வயது மகளை இழந்த தாயொருவர் பொது மக்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். கோவிட் வைரஸானது மேலும் பரவுவதை அனுமதிக்க வேண்டாம் என்று பொது மக்களிடம் அவர் மன்றாடியுள்ளார்.

நாவலவில் பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி பயின்ற 12 வயது சிறுமியொருவர் கோவிட்டால் பீடிக்கப்பட்டு கொழும்பில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து சுகயீனம் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் ராஜகிரியவில் வசிக்கும் குறித்த சிறுமியின் தாய், தங்கள் குழந்தைகள் வைரஸால் பாதிக்கப்பட அனுமதிக்க வேண்டாம் என மக்களிடம் கோரியுள்ளார்.

அத்துடன், கோவிட் என் குழந்தையை பலிகொண்டுவிட்டது. என் குழந்தைக்கு நடந்ததை போன்று வேறு யாருக்கும் நடந்துவிடக்கூடாது. கோவிட் தொற்றானது மேலும் பரவ அனுமதிக்காதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.