வவுனியாவில் மூத்த பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இராணுவத்தால் தொடர்ந்தும் முன்னெடுப்பு!!

1407

தடுப்பூசி..

வவுனியாவில் மூத்த பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இராணுவத்தால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாடு பூராகவும் இதுவரை தடுப்பூசிகள் ஏற்றாத 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு இராணுவத்தினரால் நடமாடும் சேவை ஊடாக வீடுகளுக்கு சென்று தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 800 மூத்த பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வைரவபுளியங்குளம், பண்டாரிக்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் அஸ்ரா செனக்கா கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.