வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக பீ.ஏ.சரத்சந்திர பதவியேற்பு!!

1382

பீ.ஏ.சரத்சந்திர..

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபராக பீ.ஏ.சரத்சந்திர இன்று மதியம் (27.08) பதவியேற்றுக் கொண்டார்.

வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய சமன்பந்துலசேன வடமாகாண பிரதம செயலாளராக பதவி உயர்வு பெற்று சென்றிருந்தார்.

இதனையடுத்து கடந்த ஒரு மாதகாலமாக மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய தி.திரேஸ்குமார் பதில் அரச அதிபராக கடமையாற்றியிருந்தார்.

இந்நிலையில், பௌத்தசாசன அமைச்சில் உதவி ஆணையாளராக பதவி வகித்த பீ.ஏ.சரத்சந்திர வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிலையில்,

தனது மனைவி, பிள்ளைகளுடன் வவுனியாவிற்கு வருகை தந்த அவர் பௌத்த பிக்குகள், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத் தலைவர்களின் ஆசியுடன், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவிட் பரவல் காரணமாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எளிமையான முறையில் குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.