
ஐபிஎல் விவகாரத்தில் சீனிவாசனுக்கு பதிலாக சுனில் கவாஸ்கரை இடைக்கால தலைவராக உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
சீனிவாசனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) தலைமை பொறுப்பில் இருந்து விலகுமாறு வலியுறுத்திய உச்ச நீதிமன்றம், ஐபிஎல் சூதாட்டம் உள்ளிட்ட வழக்கின் விரைவான முடிவை எடுக்கும் விதமாக இத்தீர்ப்பை அளித்துள்ளதாக தெரிவித்தது.
நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டியின் காலகட்டத்தில் மட்டுமே சுனில் கவாஸ்கர் பிசிசிஐ யின் தலைமை பொறுப்பை ஏற்பார் எனவும் கூறியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஆழ்ந்துள்ளது என்ற போதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகள் விளையாட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.





