சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமியின் உறவினர்களினால் கடந்த 21ஆம் திகதி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்தே சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் 19 வயதுடைய இளைஞனை பொலிஸார் கைது கைதுள்ளனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், யாழ்ப்பாணம் கொட்டடியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக பொய் கூறியே துஷ்பிரயோகத்தில் குறித்த நபர் ஈடுபட்டிருந்தமை தெரியவந்தது.
சந்தேக நபரை யாழ்.நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தியதையடுத்து எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.