பங்களாதேஷ் அணியை வீழ்த்தி ஹட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் முதல் அணியாக நுழைந்த இந்தியா!!

449

IND

பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20 உலக கிண்ணத் தொடர் லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஹட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

நேற்றைய போட்டியில் இந்திய – பங்களாதேஷ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் டோனி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தார்.

பங்களாதேஷ் அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 138 ஓட்டங்களை எடுத்தது. முகமதுல்லா (33), மொர்டசா (6) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக மிஸ்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இந்திய அணிக்கு தவான் (1) ஏமாற்றினார். பின் இணைந்த ரோகித், கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரை சதம் கடந்த ரோகித் 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்திய அணி 18.3 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 141 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

ஏற்கனவே பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய இந்திய அணி இதன் மூலம் ஹட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
மேலும் இத் தொடரில் முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.