ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள புதிய செய்தி!!

2133

ஊரடங்கு..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்ற தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் உடனடியாக எந்த தீர்மானங்களையும் எட்ட முடியாது என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் பதிவாகும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியே இந்த தீர்மானம் எட்டப்படும்.

மேலும், இது தொடர்பில் சுகாதார தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியே, இறுதித் தீர்மானத்தை எட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.