மேல் மற்றும் தென் மாகாணசபை தேர்தலில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள், ஆசனங்கள் விபரம்!!

690

Eleமேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி இரண்டு மாகாணங்களிலும் ஆளும் ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பு கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது.

மேல் மாகாண சபை தேர்தலில் வெற்றியடைந்த கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் மற்றும் ஆசனங்கள் வருமாறு..

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 13,63,675 வாக்குகள் – 56 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 6,79,682 வாக்குகள் – 28 ஆசனங்கள்
ஜனநாயகக் கட்சி – 2,03,767 வாக்குகள் – 9 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி – 1,56,208 வாக்குகள் – 6 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி – 51,000 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 49,515 வாக்குகள் – 2 ஆசனங்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 15,491 வாக்குகள் – 1 ஆசனம்

தென் மாகாண சபை தேர்தலில் வெற்றியடைந்த கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் மற்றும் ஆசனங்கள் வருமாறு



ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 6,99,408 வாக்குகள் – 33 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 3,10,431 வாக்குகள் – 14 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி – 1,09,032 வாக்குகள் – 5 ஆசனங்கள்
ஜனநாயகக் கட்சி – 75,532 வாக்குகள் – 3 ஆசனங்கள்