வவுனியா மகாறம்பைக்குளத்தில் நடைபெற்ற சிறுவர் துஸ்பிரயோக விழிப்புணர்வு நாடகம்!!(படங்கள்)

682

வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் வீட்டுத்திட்டம் அம்மன் கோவிலுக்கு முன்பாக நேற்று முன்தினம் (29.03) மதியம்12.00 மணியளவில் யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் கிராம அபிவிருத்தி நிறுவனம் (RDF) சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமான நாடகம் ஒன்றை நிகழ்த்தினர்.

இந் நாடகத்தை பெருந்திரளான ஊர் மக்களும் பாடசாலை மாணவர்களும் கண்டுகளித்தனர். இக் கிராமத்தில் எங்கேனும் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெறும் பட்சத்தில் 1929 எனும் இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் யுனிசெப் நிறுவனத்தினர் மக்களை கேட்டுக்கொண்டனர்.

-வே.மதுஜன்-

11 12 13 14 15