அமெரிக்காவின் இறுக்கமான குடிவரவு, குடியகல்வு சட்டம் காரணமாக இலங்கையின் தமிழ் குடும்பம் ஒன்று நாட்டில் இருந்து வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதியன்று இந்தக்குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்தது. எனினும் பல்வேறு போராட்டங்கள் காரணமாக அந்த நாடு கடத்தல் உத்தரவு ஒரு வருடத்துக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2009 போரின் பின்னர் ஜூலியன் மற்றும் கிருபா ஆகியோர் தமது பெண் பிள்ளையான ஜெனிபருடன் நெவேக்குக்கு சென்றனர். பின்னர் அங்கு இந்த தமிழ் குடும்பம் அகதி அந்தஸ்து கோரியது.
எனினும் அதற்கு மறுப்பு தெரிவித்த குடிவரவு அதிகாரிகளால் ஜூலியன் மூன்று வருடங்கள் தடுப்பில வைக்கப்பட்டிருந்தார். இதன்போது அவருக்கு காலில் வருத்தம் ஏற்பட்டு பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களுடைய மகள் ஜெனிபர் தற்போது 20 வயதான நிலையில் வெலெடிக்டோரியன் எலிமென்டரி பாடசாலையில் முதல் 20 பிள்ளைகளில் ஒருவராக படித்து வருகிறார்.
இந்தநிலையில் அவருக்கு சிறுபிள்ளையாக நாட்டுக்குள் வந்தமையால், இரண்டு வருடங்கள் நெவோக்கில் தங்கியிருக்கமுடியும்.
எனினும் தமது தாய், தந்தையர் நாட்டுக்கு திரும்பி அங்கு உயிரச்சுறுத்தலை எதிர்நோக்கும் போது தாம் நேவொக்கில் தங்கியிருப்பதில் அர்த்தமில்லை என்று ஜெனிபர் தெரிவித்துள்ளார்.
தமது தந்தையை அதிகாலை 2-3 மணிக்கெல்லாம் அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் கண்காணிப்பதாகவும் வீட்டுக்கு வந்து அவர் இருக்கிறாரா என்று சோதனை செய்வதாகவும் ஜெனிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் இந்த குடும்பத்தினர் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக கடந்த வியாழக்கிழமையன்று நெவோக்கில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது பல மனித உரிமை ஆர்வலர்கள் இந்த குடும்பம் நாடு கடத்தப்படுவதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று அமரிக்க குடிவரவு பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையின்படி குறித்த குடும்பத்தினர் இன்னும் ஒரு வருடத்துக்கு நெவோக்கில் தங்கிருக்கமுடியும் என்று அறிவித்துள்ளார்.