மக்களின் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் : வாசுதேவ நாணயக்கார!!

1016

Vasudevaமக்களின் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றியீட்டியுள்ளது. எனினும், அரசாங்கம் மீள சிந்திக்க வேண்டும் என்பதனை நினைவுபடுத்தும் வகையிலும் முடிவுகள் அமைந்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி பின்னடைவுகளை எதிர்நோக்கி வருகின்றன. எனினும், ஆளும் கட்சி தனது பலத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

மக்களின் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.