
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான வாழ்வா சாவா போட்டியில் ரங்கண ஹேரத்தின் அபார பந்து வீச்சுடன் 59 ஓட்டங்களால் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
இன்று இரவு சிட்டகொங் தேசிய மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் அரையிறுதிக்குள் நுழையும் நோக்கில் களமிறங்கியிருந்தமையால் போட்டி சுவாரஸ்யமாக காணப்பட்டது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குசேல் ஜனித் பெரேரா ஆரம்பமே அதிரடியை தொடர்ந்தார். எனினும் நீண்ட நேரடிம் நீடிக்கவில்லை. 16 ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப அடுத்த வந்த ஜயவர்தன டில்சானுடன் கைகோர்த்தார்.
இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக 9 ஓட்டங்களை பெற்றிருந்த போது டில்சான் 16 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார். அடுத்து வந்த குமார் சங்கக்கார 4 ஓட்டங்களுடன் ஏமாற்றமளிக்க அணி தடுமாற்றத்தை எதிர்நோக்கியது.
பின்னர் வந்த மெத்தியூஸ் 6, குலசேகர 0, ஹேரத் 1, மாலிங்க 0 என ஏமாற்றமளிக்க அதிகூடுதலாக மஹேல ஜயவர்தன 25 திரிமன 20, திசர பெரேரா 16 ஓட்டங்களை அணியை ஓரளவு சரிவிலிருந்து மீட்டனர்.
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் நீசாம் 3, மெக்கிலேஹேன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத் 120 என்ற சொற்ற ஓட்ட வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 15.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் குப்டில் 5, மெக்கலம் 0, டெய்லர் 0, நீசாம் 0, ரொனச் 2, நாதன் மெக்கலம் 2, மில்ஸ் 4 என அதிர்ச்சியளிக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இறுதிவரை போராடிய வில்லியம்சன் 42 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
இப்போட்டியில் அபாரமாக பந்து வீச்சை மேற்கொண்ட ரங்கண ஹேரத் 3.3 ஓவர்களில் 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்டுகளையும் சேனாநாயக இரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக ரங்கண ஹேரத் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதோடு நியூசிலாந்து தொடரிலிருந்து வெளியேறியது.





