கொழும்பு மாவட்டத்தில் வாழும் மக்கள் தொகையில் சுமார் 50 வீதமானவர்கள் விவாகரத்து செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக மனநல மருத்துவ நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
திடீர் முடிவுகளை எடுப்பது, ஆத்திரப்படுதல், தொழில்நுட்பம், சுதந்திரத்தை தேடுதல், கள்ளத் தொடர்பு, ஆண்மையின்மை, குடும்பங்களில் வெளியாரின் தலையீடு போன்றவை விவாகரத்திற்கான காரணங்களாக அமைந்துள்ளன.
திருமணம் செய்து கொள்ளும் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் கூட விவாகரத்து பெறுவதாக தகவல்கள் கிடைக்கின்றன.
இவர்களில் பெரும்பாலானவர்கள் திருமணம் செய்து குறுகிய காலம் வாழ்கை நடத்திய பின்னர், திருமண வாழ்க்கை பொறுப்புமிக்கது என கருதி அதில் இருந்து தம்மை விடுவித்து கொள்கின்றனர்.
கொழும்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது நாட்டின் பல பிரதேசங்களில் இவ்வாறான நிலைமைகளை காண முடிகிறது. மன அழுத்தமே இதற்கான காரணம் என்றும் மருத்துவர் ரூபன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.