வாக்காளர்களின் கருணையாலேயே இந்த வெற்றி : ஹிருணிகா!!

433

Hirunikaதந்தைக்கும் கிடைக்காத வகையில் தனக்கு வாக்குகள் கிடைத்தமை வாக்காளர்களின் கருணை என கொழும்பு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று மேல் மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தந்தை இல்லாத பெண் என்ற ரீதியில் பெரும்பாலானோர் தன் பக்கம் பார்வையை செலுத்தியதாகவும், இதன்மூலமே இந்த வெற்றியைப் பெற்றதாகவும் ஹிருணிகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தன்னால் இயன்றளவு மக்களுக்கு சேவை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.