கவலைக்கிடமான நிலையில் மனோரமா!!

645

Manorama

பிரபல நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த மனோரமா கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார் மனோகரமா.

கடந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமான நிலையிலிருந்த அவரை மருத்துவர்கள் சிகிச்சையளித்துக் காப்பாற்றினர். இதைத் தொடர்ந்து படங்களில் நடிக்கவும் தயாரானார். ஆனால் இப்போது மீண்டும் உடல்நிலை மோசமடைந்துள்ளது சினிமா இரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.