14 வயதான இளம் பெண்ணுடன் 7 மாதங்கள் குடும்பம் நடத்திய 23 வயதான இளைஞனை தாம் கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சட்டத்தின் கீழ், குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் – கல்லடி மீஒய வீதியில் வசித்து வந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இளம் பெண் மற்றும் சந்தேக நபரின் பெற்றோரின் விருப்பத்திற்கு அமையவே இவர்கள் ஒற்றாக வாசித்து வந்துள்ளதாகவும் பெண்ணுக்கு திருமணம் செய்யும் வயது பூர்த்தியாகவில்லை என்பதால், சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு உதவி நபர்களுக்கு எதிராகவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.