நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து கட்டணம் செலுத்தத் தவறிய நபர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கொழும்பு, பார்க் வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் குறித்த நபர் குடும்பத்துடன் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹோட்டலில் தங்கி உண்டு மகிழ்ந்த குறித்த நபர் ஹோட்டல் கட்டணங்களை செலுத்தத் தவறியுள்ளார்.
701,759 ரூபா கட்டணததை செலுத்தாது மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்தத் தவறியவருக்கு ஒரு மா சிறைத் தண்டனையும் மூவாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 16 நாட்கள் மனைவி, பிள்ளைகளுடன் இவர் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.