கைது செய்யப்பட்ட ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும், அவரது அலுவலகத்திற்கும் தாக்கிய குற்றச்சாட்டில் இம்மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் நேற்று நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.