க.பொ.த சா/த பரீட்சை முடிவு இன்று வெளியிடப்படும்!!

1085

OL2013ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை முடிவுகள் இன்னும் இணையத்தில் வெளியிடப்படவில்லை என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக சில செய்தி இணையங்கள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், அது தவறான தகவல் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.