வவுனியாவில் உள்ள ஆலயங்களில் நவராத்தி பூஜைக்கு ஆலய குருக்கள் உள்ளிட்ட மூவருக்கே அனுமதி!!

1434

நவராத்தி பூஜை..

வவுனியாவில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்கு ஆலய குருக்கள் உள்ளிட்ட மூவருக்கே அனுமதி வழங்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்துக்களின் முக்கியமான விரதங்களில் ஒன்றாகிய நவராத்திரி உற்சவம் நாளை (07.10) ஆரம்பமாகின்றது. இந்நிலையில் கோவிட் பரம்பலை கருத்தில் கொண்டு ஆலயங்களில் நவராத்திரி பூஜை மேற்கொள்ள ஆலய குருக்களுக்கும், உபயகாரார் குடும்பத்தில் இருந்து இருவருக்கும் என மூவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

எனவே, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நவராத்திரி பூஜைகளை நடத்தவுள்ள ஆலய நிர்வாகத்தினர் உங்கள் பிரிவு பொது சுகாதாரப் பரிசோதகர்களிடம் அதற்கான அனுமதியைப் பெற்று, சுகாதார நடைமுறைகளுடன், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய நவராத்திரி உற்சவத்தை நடத்த முடியும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.