200 அடி பள்ளத்தில் விழுந்து 13 வயது மாணவன் பரிதாப மரணம்!!

462

Bodyமாவனல்ல, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் உள்ள பள்ளத்தில் விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாடசாலையினால் சுற்றுலா சென்ற நிலையில் நேற்று இரவு 7.45 மணியளவில் மாணவன் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

கல்விச் சுற்றுலாவை முடித்துக் கொண்டு திரும்பும்போது பழக் கடை ஒன்றில் பஸ் நிறுத்தியவேளை மாணவன் பள்ளத்தில் விழுந்துள்ளார்.

13 வயதான மாணவன் ஒருவரே இவ்வாறு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார். இந்த மாணவன் 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மாவனல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.